என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவுடி படுகொலை"
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழவிழல்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அசோக்குமார் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்மீது மன்னார்குடி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருந்தன. மேலும் சரவணனின் பெயர் ரவுடி பட்டியலிலும் உள்ளது.
இந்த நிலையில் மன்னார்குடி மேல்பாலம் பாமணி ஆற்று சட்ரஸ் அருகில் ரவுடி அசோக்குமார் இன்று தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மன்னார்குடி போலீஸ் டி.எஸ்.பி. கார்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடி அசோக்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அசோக்குமார் உடலை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரவுடி அசோக்குமார் தலையில் வெட்டு காயம் இருந்ததால் மர்ம கும்பல் அவரை முன்விரோதத்தில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். நள்ளிரவில் அசோக்குமாருக்கு மது வாங்கி கொடுத்து பாமணி ஆற்றுக்கு அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடியை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பழனி அடிவாரம் பகுதியில் தனியார் பார் உள்ளது. இதன் மேனேஜராக ராஜன் (வயது 54) உள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் துரத்தி விரட்டி வந்ததைப் பார்த்தார். பார் அருகே உள்ள சந்தில் அந்த கும்பல் திடீரென கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளினர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அரிவாளுடன் அருகே இருந்த கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடி தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில்குமார் (38) என தெரிய வந்தது. இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் பலரிடம் தகராறு செய்ததாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்